மற்ற அணிகள் இந்தியாவை ஈசியாக வீழ்த்துவதற்கு இதுதான் காரணம் – ரகசியத்தை உடைக்கும் ஜாண்டி ரோட்ஸ்.!

இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போன்ற தொடர்களை இழந்து சோகத்தின் பிடியில் இருக்கிறது இருந்தாலும் அடுத்தடுத்த அணிகளுடன் விளையாட இருப்பதால் பாசிட்டிவாக செல்ல வேண்டிய சூழ்நிலையும் இந்திய அணிக்கு இருக்கிறது. அந்த வகையில் இந்திய அணி தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அங்கு மூன்று ஒரு நாள், மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது இந்த அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல், அஸ்வின், தினேஷ் கார்த்திக், முகமது ஷமி போன்றவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு பலருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது அடுத்த போட்டிக்காக இந்திய அணி தீவிர வள பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். கில், இஷான் கிஷன், சஞ்சீவ் சாம்சன், உம்ரன் மாலிக் உட்பட பலர் சுற்றுப்பயணத்தில் ஒரு பகுதியாக உள்ளனர் என்றும்..

இந்திய அணியில் சில சிறந்த வீரர்கள்  இருப்பதாகவும் ஐபிஎல் லில் விளையாண்டு நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ். மேலும் பேசிய அவர் ஐபிஎல் தொடரில் உலகின் சில சிறந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் உடன் பணிபுரிந்து பயிற்சி பெறுகிறார்கள்.

அந்த வகையான அனுபவம் கேள்விகளை கேட்பதன் மூலம் அவர்களின் விளையாட்டை வளர்க்க உதவுகிறது எனவும் ஜாண்டி ரோட்ஸ் ரகசியத்தை உடைத்துள்ளார். இது இந்திய வீரர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டு வீரர்களும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அசத்துகின்றனர் மேலும் இது ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு பாதகமாக அமைகிறது என்பதை தான் அவர் மறைமுகமாக சொல்லி உள்ளார்.

Leave a Comment