“படையப்பா” படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இதுதான் காரணம் – முதல் முறையாக ரகசியத்தை உடைத்த இயக்குனர்..!

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ படங்கள் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கின்றன ஆனால் ஒரு சில திரைப்படங்களை பற்றி காலம் கடந்த பிறகும் பேசுவார்கள் அந்த வகையில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் படையப்பா.

இந்த படத்தில் ஆக்சன், மாஸ் டயலாக், சென்டிமென்ட் என அனைத்துமே இடம்பெற்று இருக்கும். இந்த படம் இப்பொழுதும் கூட பலருக்கும் பிடித்த திரைப்படமாக இருக்கிறது அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் ரஜினிக்கு நிகராக நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் வாழ்ந்து இருப்பார் அதுதான் இந்த படத்திற்கு பிளஸ் ஆக பார்க்கவும் பட்டது.

இவர் நடித்த இந்த கதாபாத்திரதை இப்பொழுதும் பலரும் வியந்து தான் பேசி வருகின்றனர் அந்த அளவிற்கு தனது திறமையை காட்டி இருப்பார் இப்படி இருக்கின்ற நிலையில் நீலாம்பரி கதாபாத்திரம் குறித்து கே எஸ் ரவிக்குமார் சில விஷயங்களை சமீபத்தில் பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது..

நீலாம்பரி கதாபாத்திரத்திற்காக முதலில் நக்மா மற்றும் மீனா ஆகியவர்களில் ஒருவரை தான் தேர்ந்தெடுப்பதாக இருந்தோம் ஆனால் அவர்கள் அந்த கதாபாத்திரத்திற்கு செட்டாகவில்லையாம் மேலும் அந்த காலத்தில் ஜெயலலிதாவுக்கும் ரஜினிகாந்த்க்கு ஒரு மோதல் நிலவியது ஆதலால் ஜெயலலிதாவை மனதில் வைத்து தான் நீலாம்பரி கதாபாத்திரம் எழுதப்பட்டதாம்.

அந்த கதாபாத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணன் தான் சரியாக வருவார் என எண்ணி பின் அவரை தேர்வு செய்ததாக அந்த பேட்டியில் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் நீலாம்பரி கதாபாத்திரத்தின் தாக்கம் தான் பாகுபலி சிவகாமி கதாபாத்திரம் எனவும் நீலாம்பரி என்ற பெயரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தேர்வு செய்தார் என்றும் அந்த பேட்டியில் கே எஸ் ரவிக்குமார் கூறியிருந்தார்.

Leave a Comment

Exit mobile version