நடிகை நயன்தாரா நம்பர் 1 நடிகையாக வளர்ந்திருக்க இதுதான் காரணம் – உண்மையை உடைத்து சொன்ன சரண்யா பொன்வண்ணன்.!

nayanthara
nayanthara

நடிகை நயன்தாரா தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அந்த படத்தை தொடர்ந்து ரஜினி, அஜீத், விஜய், சிம்பு, சூர்யா போன்ற பல டாப் நடிகர்களுடன் நடித்து தனது திறமை மற்றும் விடா முயற்சியின் மூலம் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக.

வலம் வருவதோடு மட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்ற பட்டத்தையும் பெற்று உள்ளவர். தற்போது நயன்தாரா தமிழை தாண்டி பாலிவுட்டிலும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருவதால் அவரது மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்து உள்ளது.

இதனால் தனது சம்பளத்தையும் அதிகப்படுத்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இளம் நடிகர் நடிகைகளுக்கு அம்மாவாக நடித்து பெயர் போனவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். அப்படி நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்திலும் நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இதன்மூலம் நயன்தாராவைப் பற்றி சரண்யா பொன்வண்ணன் புரிந்து வைத்திருப்பதை ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.  அவர் கூறியது நயன்தாரா யாருடனாவது பேசவில்லை என்றால் அவர் மிகவும் மோசமான ஆளாக இருப்பார். தனக்கு யாராவது தொந்தரவு கொடுக்கும்படி இருந்தால் அவரிடமிருந்து சுத்தமாக ஒதுங்கி விடுவார் இந்த குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மேலும் நயன்தாரா யார் எது வேண்டுமானாலும் பேசட்டும் பேசுபவர்கள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு தன் வேலை உண்டு என்பதில் கவனமாக இருப்பதால் தான் இன்றும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் என கூறியுள்ளார்.