மைக் மோகன் சினிமா பயணம் வீழ்ச்சியை சந்திக்க காரணமே இதுதானாம் – சரியாக கணித்த அஜித்.!

80, 90 காலகட்டங்களில் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரஜினி கமல் விஜயகாந்த் சூப்பர் ஸ்டார்களை  ஆச்சரியப்படுத்தியவர் மைக் மோகன். இவர் சினிமா ஆரம்பத்தில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மெகா ஹிட் தான்.

மேலும் வருடம் வருடம் சிறந்த நடிகருக்கான விருதையும் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமா உலகில் வெற்றியை மட்டுமே சம்பாதித்து ஓடிக்கொண்டு இருந்த மோகன் திடீரென மார்க்கெட்டை இழந்து தற்போது சினிமா உலகில் காணாமல் போயுள்ளார். மோகன் எப்படி சினிமா உலகில் வீழ்ச்சியை கண்டார் என்பது குறித்து  அஜித் ஒரு படப்பிடிப்பு தளத்தில் பேசியுள்ளார்.

மோகன் வீழ்ச்சி குறித்து அஜித் சொன்னதாக இயக்குனர் ராஜ்குமார் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார் அதில் அவர் கூறியது நீ வருவாய் என படத்தில் நடிக்க முதலில் விஜயிடம் பேசினோம் அவருக்கு அப்பொழுது கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் கெஸ்ட் ரோல் பண்ணுகிறேன் என்று சொல்லி இருந்தார் பின் அஜித்திடம் மெயின் ரோல் பண்ண கேட்டிருந்தோம்.

ஆனால் அஜித்தோ அதை மறுத்துவிட்டார் ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தான் ஆச்சரியப்படுத்தியது. பொதுவாக ஹீரோயின் ஹீரோவை கடைசிவரை பிடிக்கலை என்று சொன்னால் அது நன்றாக இருக்காது மௌன ராகம் படத்தில் மோகன் மெயின் ரோலில் நடித்திருந்தார் படத்தில் ரேவதி கடைசிவரை வேணாம் வேணாம் என்று சொன்னதால் தான் அந்த படத்திற்கு பிறகு மோகன் மார்க்கெட் சரிவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

மௌன ராகம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்து அசத்தியிருந்தார். அதன்பின் கார்த்தியின் மார்க்கெட்டும் உச்சத்தை தொட்டது அதேபோல்தான் அஜித்தும் அதை சரியாக புரிந்துகொண்டு ஒரு வழியாக அஜித் கெஸ்ட் ரோலில் நடித்தார் பார்த்திபன் மெயின் ரோலில் நடித்தாராம்.

Leave a Comment