காதல் மன்னன் திரைப்பட நடிகை மானு இந்த திரைப்படத்திற்குப் பின் ஏன் நடிக்கவில்லை என்று கூறிய காரணம் இதோ.

0

This is the reason why kathal mannan actress Manu did not act after the film: தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் இணைந்து காதல் மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மானு. இவர் இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

மேலும் இத்தரைப்படத்தை தொடர்ந்து சினிமா உலகில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் இந்த படத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இந்த காதல் மன்னன் திரைப்படம் ஒரு மெகா ஹிட் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் விவேக், எம்எஸ் விஸ்வநாதன் போன்றோர் நடித்திருந்தனர்.

காதல் மன்னன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் இவர் பரதநாட்டியம் கற்றுக் கொண்டுள்ளார். இவரை பார்த்த நடிகர் விவேக் இவரின் குருநாதரிடம் பேசி இவரை காதல் மன்னன் திரைப்படத்தில் நடிக்குமாறு கூறியுள்ளார். மேலும் குருநாதரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு மிகவும் கடினமாக இருந்துள்ளது.

இந்த படத்தில் நடித்த அஜித், விவேக், எம்எஸ் விஸ்வநாதன் என அனைவருமே சிறந்த நடிகர்கள் எனவே என்னால் அவர்களுடன் நடிப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது என்று கூறியுள்ளார். நான் இந்த திரைப்படம் நடித்து முடித்தவுடன் அசாமுக்கு சென்று விட்டேன். அங்கேயும் பல இயக்குநர்கள் என்னை தேடி வந்தனர்.

ஆனால் நான்தான் நடிக்க மறுத்துவிட்டேன். நடிகர் விஜயின் மேனேஜரும் என்னை சந்தித்து பேசினார் ஆனால் எனக்குதான் சினிமா இண்டஸ்ட்ரி மீது விருப்பமே இல்லை. நான் எவ்வளவு பெரிய வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் என்று கொஞ்ச நாள் போனதும்  தான் தெரியவந்தது என மனம் திறந்துள்ளார். தற்போது நடிகை மானு அவருக்கு தெரிந்த நடனக் கலையை வைத்து ஒரு நடன பள்ளியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.