கடைசி வரை ரகுவரன் உடன் கமல் நடிக்கமால் இருக்க இதுதான் காரணமா.! விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் நடிப்புகளில் பெயர் போனவர்கள் ஒரு சிலரே அந்த வகையில் நடிப்பில் முதன்மையாக விளங்குபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருக்கு பிறகு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வாழும் நடிகர் கமலஹாசன். ஆரம்பத்தில் இருந்தே புதுவித கதைக்களத்தை தேர்ந்தெடுப்பது,முன்னணி நடிகர்கள் நடிக்க முடியாத கதையை எடுத்து தனது திறமையை வெளிகாட்டி தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத நபராக உருப்பெற்றார் கமலஹாசன்.

அதுமட்டுமில்லமால் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிலைநாட்டி கொண்டிருப்பவர் கமலஹாசன். அப்படிப்பட்ட கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கடி தந்த நடிகர்களில் ஒருவர் ரகுவரன். கமலஹாசனை விட நடிப்பில் அசுரனாக வளர்ந்தவர் ரகுவரன்.

சினிமா வட்டாரங்களில் சிவாஜிக்கு அடுத்தபடியாக சிறந்த நடிப்பை விளங்குபவர்கள் யார் என்று கூறப்பட்டால்  அதில் ரகுவரன் பெயரும் இடம்பெறும் என்பதில் மறுக்கமுடியாது என்பது நாம் அறிந்ததே. அதன் காரணமாகவோ என்னவோ கமலஹாசனும், ரகுவரனும் சேர்ந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தனர்.

raguvaran
raguvaran

அந்தவகையில் குருதிப்புனல் படத்தில் நாசர் கதாபாத்திரத்தில் முதலில் ரகுவரன் தான் கமிட்டாகி இருந்தார் ஆனால் நாசர் முஸ்லிம் என்பதால் டெரரிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாக இருப்பார் என அவரையே கமிட் செய்யுங்கள் என இயக்குனரை சமாதானப்படுத்தி கொள்ள வைத்தார் கமல் இதிலிருந்தே தெரிகிறது ரகுவரன் கமலை மிஞ்சிவிட்டார் என்று ரகுவரனின் சிறந்த நடிப்பு களை பேசும்  படங்களான பாஷா, ரட்சகன் போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையிலும் கமலும்,ரகுவரனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வதை பெரிதும் தவிர்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் கமலை விட கதாபாத்திரத்தின் மூலம் பெயரை நிலைநாட்டிக் கொண்டவர் ரகுவரன் என்பது மறுக்க முடியாத உண்மை.

Leave a Comment