தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடிப்பில் வெளியான கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் நடித்த இளம் பாரதி என்ற நடிகர் சமீபத்தில் கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த திரைப்படமானது இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்தில் லாஸ்லியா தர்ஷன் மட்டுமின்றி கேஎஸ் ரவிக்குமார் யோகி பாபு மனோபாலா மாரியப்பன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள் இந்த திரைப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தினை கே எஸ் ரவிகுமார் தான் தயாரித்துள்ளார்.
இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது கலவையான விமர்சனங்களை பெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைப் படத்தில் ரோபோவாக நடித்த நடிகர் சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.அதில் அவர் பேசியது என்ன வென்றால் தான் ஊர் ஆவடி என்ற கிராமத்தை சேர்ந்தவர்.
நான் வளரவில்லை அதற்கு முக்கிய காரணம் கடவுள் செய்த வினைதான் என்னுடைய மனைவி பெயர் பொம்மி நாங்கள் இருவரும் சென்னையை சேர்ந்தவர் என்னுடன் பிறந்தவர்கள் மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் அதில் நானும் என்னுடைய சகோதரரும் உயரம் குறைவாக இழந்துவிட்டோம்.
என்னை போலவே என்னுடைய மனைவியும் உயரம் குறைவானவர் அதுமட்டுமில்லாமல் அவருடைய குடும்பத்தையும் 3 பேர் உயரமாக உள்ளார்கள். இவ்வாறு உயரம் குறைவாக காரணம் சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதுதான் எனவே என்னுடைய அப்பாவும் அம்மாவும் சொந்தக்காரர்கள்.
அந்த வகையில் தான் வயிற்றில் இருக்கும் பொழுது வளர்ச்சி குறைவாக தென்பட்டேன் அதுமட்டுமில்லாமல் எனக்கு பத்து வயது வரை எந்த ஒரு பிரச்சனையும் தெரியவில்லை பின்னர் என்னுடைய பெற்றோர்கள் மருத்துவமனையில் சென்று என்னை சோதித்து பார்த்தார்கள் அப்பொழுது ஆயிரம் ரூபாயில் தலையில் ஒரு ஊசி போட்டால் ஒரு இன்ச் வளருவேன் என்று சொன்னார்கள் அப்போது பணப் பற்றாக்குறையின் காரணமாக எனக்கு அந்த ஊசி போடவில்லை.

அதுமட்டுமில்லாமல் பலரும் என்னுடைய உயரத்தைப் பார்த்தும் வாழ்க்கையை பார்த்தும் கிண்டலும் கேலியும் செய்வது வழக்கமாகிவிட்டது இதனைக் கேட்டு கேட்டு எனக்கு சலித்துப் போனது மட்டுமில்லாமல் அவை பழக்கமாகிவிட்டது பின்னர் எனக்கு சினிமா ஆபிஸ் ஒன்றில் கிளர்க்காக வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதன்மூலம் நான் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றேன்.
பின்னர் திரைப்படங்களில் கூட சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தேன். ஆனால் சினிமா என்பது நிரந்தரம் இல்லாமல் போய்விட்டது இந்நிலையில் நிரந்தரமாக எங்களை மாதிரி ஆட்களுக்கு வேலை வேண்டும் இது குறித்து நாங்கள் பலர் முகாம் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகிறோம் ஆனால் இரண்டு ஆட்சியிலும் எங்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை.
அதேபோல எனக்கு நடனத்தில் அதிக அளவு ஆர்வம் உண்டு ஆனால் உயரம் குறைவான டான்ஸ் மாஸ்டர் யாருமே கிடையாது அதனால் என் ஆசையை நானே விட்டுவிட்டேன் மேலும் கே எஸ் ரவிகுமார் சாருடன் நான் 25 நாட்களுக்கு மேலாக பயணத்தில் அவரிடமிருந்து இயக்கம் பொறுமை என பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன் என்று கூறியது மட்டுமின்றி எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் சிறந்த இயக்குனராக என்னை நிரூபிப்பேன் என கோரியிருந்தார்.