ஆல்யாவுக்கு பச்ச துரோகம் செய்த விஜய் டிவி.? அதனால்தான் சன் டிவிக்கு மாறினாரா.? வெடித்தது உண்மை..

0
aliya-manasa
aliya-manasa

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளாக சன் மற்றும் விஜய் டிவி திகழ்ந்து வருகிறது. இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் டிஆர்பியில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் முன்னணி வகித்தது வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற சீரியல் தான் ராஜா ராணி. இந்த சீரியலில் புது முக நடிகர், நடிகைகளான ஆர்யா மானசா மற்றும் சஞ்சீவி இருவரும் அறிமுகமானார்கள். இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் டிஆர்பி-யில் முன்னணி இடத்தை பிடித்தது.

மேலும் இந்த சீரியலினை தொடர்ந்து தற்பொழுது ராஜா ராணி 2 சீரியலும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு விஜய் டிவியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு ஆலியா மானசா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் அவர் சீரியலில் நடிக்கவில்லை. இந்நிலையில் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

கயல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இந்த சீரியல் தான் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. இதனை தொடர்ந்து ஆலியா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகினார். மேலும் மீண்டும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய இவர் விஜய் டிவியில் நடிப்பார் எதிர்பார்க்கப்பட்டது மேலும் விஜய் டிவியும் தொடர்ந்து சில சீரியல்களின் வாய்ப்பைக் கொடுத்த நிலையில் தற்போது ஆலியா மானசா சன் டிவி சீரியல்களில் நடிக்க இருக்கிறாராம்.

ஏன் ஆலியா மானசா விஜய் டிவியில் நடிக்காமல் சன் டிவியில் நடிக்கிறார் என்று குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் அதற்கு ஆலியா மானசா விஜய் டிவியில் சரியாக சம்பளம் தர மாட்டார்களாம் ஆனால் சன் டிவியில் சரியாக சம்பளம் தருவதாகவும் அதன் காரணத்தினால் தான் சன் டிவி சீரியல்களில் நடிப்பதாகவும் கூறியுள்ளார் என்ற தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.