பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய திருமணம் குறித்து பேசாததற்கு இதுதான் காரணம்..! மனம் நொந்து பேசிய இசைவாணி..!

0
isai-vani
isai-vani

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக அமைந்தது தான் பிக் பாஸ். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5 சீசன் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் இந்த சீசனில் அளவுக்கு அதிகமான பெண்கள் போட்டியாளர்கள் தான் உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு வந்த சீசன்கள் எல்லாம் சின்னத்திரை நடிகைகள்  மற்றும் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் ஆனால் இந்த சீசனில் பெரும்பாலும் மாடல் அழகிகள் தான் கலந்து கொண்டுள்ளார்கள்.

அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட இசைவாணி தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளை பற்றி பேசியது மட்டுமில்லாமல் தன்னுடைய திருமணம் மற்றும் விவாகரத்து பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

ஆனால் சமீபத்தில் இதுபற்றி இசைவாணி பேசி உள்ளார் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் இந்த போட்டியில் விளையாடி வந்தார் பின்னர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்த பிறகு இவருடைய வாய் கொஞ்சம் நீண்டு விட்டது.

isai-vani
isai-vani

அந்த வகையில் இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னைப் பற்றி பேசிய பொழுது நாங்கள் சாப்பாட்டுக்கு கூட ரொம்ப கஷ்டப்படும் அதுமட்டுமில்லாமல் இப்போதுவரை எங்களுக்கு சொந்த வீடு கிடையாது உடுத்திக் கொள்ள சரியான துணி கூட கிடையாது மேலும் என்னுடைய அப்பாவுக்கு பாட யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று தன் வாழ்க்கையைப் பற்றிப் பேசிய இசைவாணி தன் கணவரை பற்றி ஏன் பேசவில்லை என்பது ரசிகர்களின் கேள்வியாக மாறிவிட்டது.

isai-vani
isai-vani

இசை வாணிக்கு கர்நாடக பாடகர் ஸ்ரீகாந்த் தேவா உடன் திருமணம் நடைபெற்றது பின்னர் இவர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். இந்நிலையில் சமீபத்தில் இசைவாணி தான் திருமணத்தை மறைக்க வேண்டும் என்ற காரணத்தினால் இதை மறைக்க வில்லை ஏனென்றால் அதை ஞாபகப்படுத்தவும் நினைவூட்டும் எனக்கு விருப்பமில்லை ஆகையால் தான் அதைப் பற்றி நான் பேசவில்லை என்று கூறியுள்ளார்.அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து 50 நாட்களிலே வெளியேறிவிட்டார்.

isai-vani
isai-vani