தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது அந்த வகையில் இந்த அடை மழையில் சிம்பு ரசிகர்களை அலைகடல் ஆக திரண்டிய திரைப்படம்தான் மாநாடு. இத்திரைப்படம் என்னதான் மழை கொட்டி தீர்த்தாலும் திரையரங்கில் ரசிகர்கள் ஹவுஸ்புல் ஆகிவிடுகிறது.
இவ்வாறு சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்து வரும் இந்த திரைப்படமானது முதலில் வேறு ஒரு நடிகர் நடிக்க இருந்த திரைப்படம் ஆகும்.அந்த வகையில் முதன் முதலில் இந்த மாநாடு திரைப்படத்தின் கதையை விஜய்க்காக தான் எழுதினேன் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
மேலும் சில காரணங்களின் காரணமாகத்தான் இந்த திரைப்படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போய்விட்டதாம் அதன் பின்னர் தான் சிம்பு இந்த திரைப் படத்தில் கமிட்டானார் என கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய் ஏன் இந்த திரைப்படத்தை நிராகரித்தார் என்ற ரகசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது மாநாடு திரைப்படத்தின் கதை உருவாக்கிய உடனே வெங்கட் பிரபு முதலில் விஜய்யை நேரில் சந்தித்தாராம்.இவ்வாறு கதையை கேட்டுவிட்டு தளபதி விஜய் எனக்கு இந்த கதை மிகவும் பிடித்துவிட்டது ஆனால் இந்த கதையில் தனக்கு தகுந்தார் போல் சில மாற்றங்கள் இருக்க வேண்டும் என கூறினாராம்.
பின்னர் வெங்கட்பிரபுவின் நண்பர்கள் மலேசியாவிலிருந்து வந்து இருந்தார்கள் அப்போது ஒரு பார்ட்டி நடத்தப்பட்டது அதில் விஜய் வெங்கட் பிரபு என பலர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்பொழுது வெங்கட்பிரபுவின் மலேசியா நண்பர் ஒருவர் விஜய் சரக்கு அடிப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டு விட்டார்கள்.
இதனால் சமூக வலைதளப் பக்கத்தில் தளபதி விஜய்யை அனைவரும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள் பின்னர் விஜய் கோபத்தில் மாநாடு திரைப்படத்தில் என்னால் நடிக்க முடியாது என கூறி விட்டாராம்.