“ஜீன்ஸ்” திரைப்படத்தில் அஜித் நடிக்காமல் போனதற்கு இதுதான் காரணம் – தயாரிப்பாளர் கொடுத்த பேட்டி.!

0
ajith-
ajith-

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து பயணித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் இப்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் துணிவு இந்த படத்தில் அஜித் ரொம்ப மேனக்கட்டு நடித்திருக்கிறாராம் ஹெச் வினோத்தும் இந்த படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறாராம்.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் திரையுலகில் எத்தனை நல்ல படங்களை தவற விட்டு இருக்கிறார் என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது. அதில் பெரிதாக சொல்லப்படுவது ஜீன்ஸ் திரைப்படத்தை தான் இது குறித்து  வதந்திகளும் இருக்கிறது.

அதாவது ஜீன்ஸ் திரைப்படத்தில் முதலில் ஐஸ்வர்யாராயும் அஜித்தும் தான் இணைந்தனர் ஆனால் ஐஸ்வர்யா ராய் அஜித்துடன் நடிக்க முடியாது என கூறியதால் அஜித்தை அந்த படத்திலிருந்து தூக்கி விட்டு அவருக்கு பதிலாக அப்பாஸை போட பேசினார் என பலரும் பலவிதமாக பேசி வந்தனர்.

ஆனால் உண்மையான தகவலை பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார் வாங்க அதைப்பற்றி பார்ப்போம். ஜீன்ஸ் திரைப்படத்தில் முதன் முதலில் ஐஸ்வர்யாராயும், நடிகர் பிரசாந்தும் தான் நடிக்க ஒப்பந்தமானார்களாம். அதுதான் உண்மையும் கூட என அவர் பேட்டியில் கூறி இருக்கிறார்.