தமிழ் சினிமா உலகில் சிறப்பான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் இன்னும் திரையரங்குகளில் படத்தை பார்க்க ஆசைப் படுகின்றனர்.
அடுத்ததாக மீண்டும் மூன்றாவது முறையாக ஹச். வினோத் உடன் இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இது இப்படி இருந்தாலும் தற்போது அஜித் பற்றி ஒரு சூப்பர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதாவது பாலாவின் நான் கடவுள் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது
நான் கடவுள் திரைப்படத்திற்காக அஜித் முடியை எல்லாம் வளர்த்து படத்தில் நடிக்க ரெடியாக இருந்தார் ஆனால் பாலா அஜித்தை படத்தில் கமிட் செய்து இருந்தாலும் அவரிடம் படத்தின் கதையை சொல்லவே இல்லையாம். அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலா கதை சொல்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அங்கிருந்த நடிகைகளோ அஜித்திடம் இயக்குனர் பாலா அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் படத்தின் கதையையே உருவாக்குவார் அதையும் முழுமையாக சொல்ல மாட்டார் என சொல்லி உள்ளனர் இதனை அடுத்து அஜீத் இயக்குனர் பாலாவை தளத்திற்கு அழைத்து முழு கதையையும் சொல்லுங்கள் என கேட்டுள்ளார்.
நான் இதுவரை யாரிடமும் முழு கதையை சொன்னதே கிடையாது என ஓபன்னாக பேச அஜித் அப்படி என்றால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என கூறி வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுத்து அனுப்பியுள்ளார்.

