சினிமா உலகில் அஜித் டான்ஸ் ஆட முடியாமல் போனதற்கு இதுதான் காரணம். உண்மையை பேட்டியில் போட்டு உடைத்த பிரபல நடிகர்.

தமிழ் சினிமா உலகில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்தவர்  நடிகர் அஜித்குமார் இப்படி இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது வழக்கம். மேலும் அஜித்தின் படத்தை வருடத்திற்கு ஒரு முறையாவது பார்த்து நல்லபடியாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் அண்மையில் வெளிவந்த வலிமை திரைப்படத்தையும் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடித் தீர்த்தனர்.

அதை நாம் பார்த்துள்ளோம் அதுபோல அடுத்த  அஜித்தின் படத்தையும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் பற்றி ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது அஜித் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும் நடனம் போன்றவற்றில் ஏன் அதிகம் கவனம் செலுத்த மாட்டார்கள் என்றொரு குற்றச்சாற்று ரசிகர்கள் மத்தியில் இருக்கலாம் அதற்கான உண்மையான காரணத்தை தற்போது சொல்லியுள்ளார் நடிகர் பப்லு என்கின்ற பிரித்திவிராஜ்.

பேட்டி ஒன்றில் அவர் சொன்னது சினிமா ஆரம்பத்தில்  அஜித் நன்றாக நடனமாடியும், நடித்தும் வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அவர் கார் பந்தயத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொழுது ஒரு விபத்து ஏற்பட்டது அந்த விபத்துக்கு பிறகு அவரது உடம்பில் பல ஆபரேஷன்கள் செய்யப்பட்டன . அதன்பிறகு அவர் படங்களில் நடனமாடுவதை அதிகம் கவனம் செலுத்த முடியாமல் போனது.

அந்த அளவிற்கு அவரது உடம்பில் ஆபரேஷன்கள் செய்யப்பட்டிருக்கின்றன மறுபக்கம் அவரது உடல் எடையும் அதிகரித்து உள்ளதால் உடம்பை அவருக்கு ஒத்துழைக்கவில்லை என கூறினார் மேலும் அஜித் சூட்டிங் நேரத்தில் அதிகம் நொறுக்குத்தீனி சாப்பிடும்  பழக்கம் உண்டு ஏன் நான் நடித்த அவள் வருவாளா படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் கூட அஜித் நடிப்புக்கு நேரம் போக மீதி நேரங்களில் நொறுக்குத் தீனியை தின்று கொண்டே இருப்பார்.

அதனால் அவரது உடல் எடை தற்போது அதிகரித்துள்ளது அந்த காரணங்களால் உடல் எடை மிதமானது பின் அவரால் நடனம் ஆட முடியாமல் போனது. அவரது உடல் தற்போது அதிகமாக இருப்பதால் ஒரு சில விஷயங்கள் அவரால் சினிமா உலகில் செய்ய முடியவில்லை என கூறினார்.

Leave a Comment