Actor Ajith: நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இதற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் எதற்காக பேட்டிகள் கொடுப்பதை நிறுத்தினார் என்ற உண்மையான தகவலை பிரபலம் ஒருவர் பகிர்ந்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் அஜித் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது விடா முயற்சியினால் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று தற்பொழுது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவர் அஜித் என ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.
சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல தோல்விகளையும் அசிங்கங்களையும் சந்தித்து தான் தனக்கான இடத்தை அஜித்து பிடித்தார். இந்நிலையில் கடைசியாக துணிவு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை கண்ட நிலையில் இதனை அடுத்து விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.
விடாமுயற்சி படத்தின் அப்டேட் மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியானாலும் தற்போது வரையிலும் படப்பிடிப்பு துவங்கவில்லை. எனவே எப்பொழுது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி துவங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜித் சுற்றுலாவை முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். இந்நிலையில் தொகுப்பாளர் கோபிநாத் அஜித்தை பேட்டி எடுத்த அனுபவம் குறித்து பேசி உள்ளார். அதாவது, அஜித்தை ஒரு சில வருடங்களுக்கு முன்பு பேட்டி எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த பேட்டி துவங்கிய பொழுது அஜித் சற்று தயங்கி தயங்கி தான் பேசினார்
வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்தினார் இதனை பார்த்த நான் அஜித்தின் தயக்கத்திற்கான காரணம் பற்றி கேட்டேன் அதற்கு அவர் கூறியது, என்னவென்றால் நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு தமிழ் பேச சரளமாக வராது. எனவே நான் ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்தேன் உடனே சிலர் இவர் தமிழ் படம் தானே நடிக்கிறார் பிறகு தமிழில் பேச மாட்டாரா என்றார்கள். இதன் அடுத்து நான் தமிழில் பேச முயற்சித்தால் என்ன சரளமாக தமிழ் பேச வரலையே என்கின்றனர்.
மேலும் இதன் காரணமாக பேட்டிகள் கொடுப்பதை நிறுத்தினால் ரொம்ப ஓவரா போறாரு என சொல்கின்றனர். இவ்வாறு இந்த விமர்சனங்களால் தான் அஜித் பேட்டி கொடுக்க தயங்குவதாக கோபிநாத் கூறியுள்ளார். ஆரம்பத்தில் சுதப்பினாலும் போகப்போக அஜித் சரளமாக பேசியதாகவும் கோபிநாத் கூறுகிறார்.