நடிகை மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க துவங்கி இருக்கும் நிலையில் ஏன் இத்தனை ஆண்டுகளாக நடிக்காமல் இருந்து வந்தார் என்பது குறித்து காரணத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மின் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான சூத்ரதாரன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து சாக்லேட் பாய் மாதவனுடன் இணைந்து 2002ஆம் ஆண்டு வெளியான ரன் படத்தின் மூலம் மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவ்வாறு இதன் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்த மீரா ஜாஸ்மின் புதிய கீதை, ஆஞ்சநேயா, மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரி பூக்கள், பரட்டை என்று தொடர்ந்து வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வரும் விஜய் மற்றும் அஜித்துடனும் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் 2008ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான மண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்த நிலையில் ஆனால் இந்த திருமணம் நின்றுவிட்டது.
இதனை அடுத்து 2014ஆம் ஆண்டு தனது 32 வயதில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் அனில் ஜான் டைட்டசை திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆகிவிட்டார். பின்னர் 2016ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது தொடர்ந்து தனது உடல் எடையை குறைத்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் உடல் எடையை குறைத்த இவர் சமீப காலங்களாக தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் சசிகாந்த் இயக்கம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் இந்த படத்தில் மாதவன், சித்தாந்த, நயன்தாரா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மீரா ஜாஸ்மின் சமீப பேட்டியில், சில ஆண்டு காலம் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக நடிப்பிலிருந்து விலகி இருந்தேன் இப்பொழுது மீண்டும் நடிப்பை துவங்கியிருக்கிறேன் அதனால் எனது பயணம் மீண்டும் ஆரம்பமாவது போல் இருக்கிறது சமூக வலைதளங்கள் என்னுடைய பதிவுகளுக்கு ரசிகர்கள் பாசிடிவ்வாக பதில் அளித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.