விஜய் சேதுபதி அதிக படங்களில் நடிக்க இதுதான் காரணம்.. அட இத்தனை நாளா இது தெரியாம்போச்சே

இப்போ உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமாகி இருப்பார்கள் அவர்களுக்கு கஷ்டம் என்பது நிறையவே தெரியும்.. மேலும் தான் பட்ட கஷ்டத்தை இன்னொருவர் படக்கூடாது என நினைப்பதுண்டு..

அந்த வகையில் விஜய் சேதுபதி சின்ன சின்ன கதாபாத்திரங்களின் மூலம் சினிமா உலகில் படிப்படியாக நுழைந்தார் தற்பொழுது ஹீரோ வில்லன் என இரண்டிலும் மாஸ் காட்டி வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை தழுவி இருந்த போதிலும்..

விஜய் சேதுபதியின் மார்க்கெட் குறையவில்லை ஆம் தமிழை தாண்டி தெலுங்கு ஹிந்தி போன்றவற்றில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.  இப்போது கூட ஏழு எட்டு படங்களில் நடிக்கிறார். எல்லோரும் நினைப்போம் காசுக்காக தான் விஜய் சேதுபதி ஏழு எட்டு படங்களில் நடிக்கிறார் என்று ஆனால் அதற்கு இன்னொரு காரணமும் இருக்கு..

சினிமாவில் பலரும் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் அப்படி ரொம்ப கஷ்டப்பட்டவர் தான் விக்னேஷ் சிவன் அவருக்கு நானும் ரவுடிதான் பட வாய்ப்பை விஜய் சேதுபதி வழங்கினார் அந்த படம் வெளிவந்து வெற்றி பெற்றது இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்த அனுபவம் குறித்து விக்னேஷ் சிவன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் அதில் சொன்னது என்னவென்றால்..

நானும் ரவுடிதான் திரைப்படம் ஹீரோவுக்கு பெரிய அளவில் ஆக்சன் காட்சிகள் இல்லை அதுமட்டுமின்றி வில்லன்கள் ஒருவருக்கொருவர் குற்றியே இறந்து விடுவார்கள் அதுவும் இவர் ஒரு பயந்த சுபாவம் உடையவராக நடிக்க வேண்டும் ஆகையால் மற்ற நடிகர்கள் நிராகரித்த பின் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதிவிடம் சென்று இருக்கிறார்.

விஜய் சேதுபதியும் கதையை படித்துவிட்டு என்னடா இது கதை இதுல எனக்கு ஒண்ணுமே இல்லை என்று விஜய் சேதுபதி சொன்னாராம் ஆனாலும் நான் கால்ஷீட் கொடுத்தால் உனக்கு படம் ஓடணும்னு தரேன் என்று நானும் ரவுடிதான் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதித்தாராம்.. இதுபோன்ற இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவதற்காகவே விஜய் சேதுபதி வருடத்திற்கு ஏழு, எட்டு படங்களில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment