கமலுடன் சேராமல் போனதற்கு இதுதான் காரணம்.? வெளிப்படையாக உண்மையைக் கக்கிய ஏ ஆர் முருகதாஸ்

kamal-
kamal-

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக வருபவர் ஏ.ஆர் முருகதாஸ் இவர் இதுவரை எடுத்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான்.. அந்த வகையில் முதலில் தீனா என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் எடுத்த துப்பாக்கி, கத்தி, சர்க்கார்  போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததால்..

அடுத்தடுத்த டாப் நடிகர்களை வைத்து படம் பண ஆரம்பித்தார் அப்படித்தான் ஒரு வழியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து  தர்பார் கதையை சொல்லி ஓகே வாங்கினார் இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது அதன் பிறகு தமிழ் சினிமாவில்  ஏ ஆர் முருகதாஸுக்கு  மார்க்கெட் சரி ஆரம்பித்தது.

அன்றிலிருந்து இப்பொழுது வரையும் எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்து வருகிறார்.  படங்களை இயக்கவில்லை என்றாலும் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் கெத்து காட்டி வருகிறார்கள் தற்பொழுது கௌதம் கார்த்திக் நடித்துள்ள 1947 என்னும் படத்தை தயாரித்துள்ளார் இந்த படம் வருகின்ற ஏழாம் தேதி கோலாகலமாக திரைக்கு வர இருக்கிறது..

இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 1947 படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர். முருகதாஸ் நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவரிடம் நீங்கள் கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்றால் உங்களிடம் அதற்கான சப்ஜெக்ட் இருக்கிறதா என கேட்டு இருக்கின்றனர் இதற்கு பதிலளித்த  முருகதாஸ்..

கமல் என்றால் எனக்கு அப்பொழுது இருந்தே சிறிய பயம் இருக்கும் ஆனால் எல்லா இயக்குனர்களுக்கும் கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஏனென்றால் கமல் சாரை வைத்து இயக்கும் படங்கள் தான் அந்த இயக்குனர்களின் கேரியரில்  பெஸ்ட் படமாக இருக்கும் இதில் நான் சாதாரண படத்தை எடுத்து விடக்கூடாது என்ற பயத்தில் தான் இதை செய்யவே இல்லை என தெரிவித்துள்ளார்.