IPL இறுதி போட்டி நேற்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது முதலில் டாஸ் வென்ற தோனி பவுலிங்கை தேர்வு செய்தார் இதை அடுத்து களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்திலேயே அதிரடியை காட்டியது இருந்தாலும் கில் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார் இதனை அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும்..
போகப்போக அதிரடியை காட்ட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவர் 96 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார் மறுபக்கம் சஹா 50 ரன்களுக்கு மேல் அடித்தார் இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்தது இந்த இலக்கை துரத்தியது சென்னை அணி. முதல் ஓவரின் போது மழை பெய்ததால் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
15 ஓவர்களில் மட்டும் 171 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி என்று சொல்லப்பட்டது இதனை எடுத்து விளையாண்ட சென்னை அணி ஆரம்பத்திலேயே அதிரடியை காட்டியது குறிப்பாக கான்வே 40 நாட்களுக்கு மேல் அடித்தார் மற்றவர்கள் அனைவரும் குறிப்பிட்ட அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பெரிய ரன்கள் சேர்க்க முடியவில்லை கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி இரண்டு பந்தில் ஜடேஜா 6, 4 அடித்து சென்னை அணியை வெற்றி பெற செய்தார் இதன் மூலம் சென்னை அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. பிறகு தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா.. நான் சாக்கு போக்கு சொல்ல விரும்பவில்லை எங்களை விட சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்த சீசனில் எங்களுடைய ஆட்டம் சிறப்பாக இருந்தது.
இந்த போட்டியில் சாய் சுதர்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் வாழ்க்கையில் இன்னும் பல ஆச்சரியங்களை நிகழ்த்தப் போகிறார் அவர் நன்றாக வருவார் என கூறினார் மேலும் பேசிய ஹர்திக் பாண்டியா.. நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் நான் பார்த்த நல்ல மனிதர்களில் தோனியும் ஒருவர்.. தோனிக்காக மகிழ்ச்சி என தெரிவித்தார்.