குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதற்கான காரணம் இதுதான்.! வெளியிட்ட புகைப்படத்தால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

vj-manimegalai-1
vj-manimegalai-1

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவி தொடர்ந்து பல சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டையும் தாண்டி உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இது சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட பலருடைய மனக்கவலையை தீர்த்து மகிழ்ச்சியடைய வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக விளங்கி வருவதால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.

சொல்லப் போனால் பலரும் இந்நிகழ்ச்சியின் மூலம் மகிழ்ச்சியாக இருந்து வருவதாக கூறி வருகிறார்கள். இப்படி இந்த நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மணிமேகலை. இந்நிகழ்ச்சி தற்பொழுது தமிழில் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இதில் கோமாளியாக பங்கு பெற்று வந்தவர் தான் மணிமேகலை.

இவரை தொடர்ந்து சுனிதா, ஜிபி முத்து, நடிகர் ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா உள்ளிட்டவர்கள் 4வது சீசனில் கோமாளிகளாக பங்கு பெற்று வருகின்றனர். அந்த வகையில் மணிமேகலை பலவிதமான கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டதாக அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் எதற்காக வெளியேறினார் என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில் பலரும் கர்ப்பமாக இருப்பதாக கூறி வந்தார்கள். மேலும் இது குறித்து புகழிடம் கேட்ட பொழுது யாரும் பொய்யான வதந்திகளை பரவ வேண்டாம் அப்படி கர்ப்பமாக இருந்தால் சந்தோஷம்தான் அவருடைய பர்சனல் விஷயங்களால் தான் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகி இருப்பதாக கூறினார்.

vj manimegalai
vj manimegalai

ஆனால் மணிமேகலை தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது மணிமேகலை கிராமத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டவுள்ளார். அதற்கான பாலக்கால் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.