சக நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் பொழுது எனக்கு வரும் பிரச்சனை இதுதான் – மனம் திறந்து பேசிய நடிகர் அருள்நிதி.!

0
arul-nithi
arul-nithi

நடிகர் அருள்நிதி வம்சம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே வெற்றி படமாக அருள்நிதிக்கு அமைந்ததால் சினிமா உலகில் பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன இருப்பினும் அருள்நிதி தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்ததால் அவருக்கான வெற்றி அதிகமாக கிடைத்தது.

குறிப்பாக நடிகர் அருள்நிதி திரில்லர் மற்றும் பேய் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கடைசியாக கூட இவர் நடிப்பில் வெளிவந்த டி பிளாக் த்ரில்லர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் தான் தேஜாவு.

இந்தப் படத்தில் நடிகை மதுபாலா படம் முழுக்க முழுக்க போலீசாக நடித்துள்ளார் இந்த படமும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருந்தது இந்த படமும் வெளியாகி தற்பொழுது வெற்றி நடை கண்டு வருகிறது. நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளதால் வசூல் வேட்டையும் நன்றாகவே நடத்தி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த பல்வேறு வித்தியாசமான படங்களிலும் கமிட் ஆகிய நடித்து வருகிறார் இதனால் அருள் நிதியின் சினிமா மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அருள்நிதி படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்பொழுது அவரிடம் ஒரு சீனில் நீங்கள் சக நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் பொழுது உங்களுக்கு பயம் வருமா என கேட்டுள்ளனர். அந்தந்த சுச்சுவேஷனில் டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை நான் கரெக்டாக செய்து விடுவேன். பல நடிகர்கள் நடிக்கும் பொழுது எனக்கு பயமாகத்தான் இருக்கும் இருப்பினும் டைரக்டர் சொல்லுவதை நான் அப்படியே செய்து விடுவேன் என கூலாக நடிகர் அருள்நிதி பதில் கொடுத்தார்.