இந்த பொங்கல் திருவிழா தான்.! துணிவு மேல.. வாரிசு கீழே.. வைரலாகும் புகைப்படம்.!

0
thunivu
thunivu

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும்  நடிகர்களின் படங்கள் விசேஷ நாட்களில் மோதிக்கொள்வது வழக்கம் அந்த வகையில் ரஜினி, கமலை தொடர்ந்து அஜித், விஜய் படங்கள் எப்பொழுதுமே விசேஷ நாட்களில் வெளிவருவது வழக்கம் இதன் மூலம் பல தடவை அவர்கள் நேருக்கு நேர் படங்களின் மூலம் மோதி உள்ளனர்.

இருப்பினும் சமீபகாலமாக இவர்கள் இருவரும் தனித்தனியாக படங்களை ரிலீஸ் செய்த வந்த நிலையில் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித் – விஜயின் படங்கள் நேருக்கு நேராக மோத உள்ளது. எட்டு வருடங்கள் கழித்து இந்த சம்பவம் நடக்க இருப்பதால் ரசிகர்கள் பொங்கலை திருவிழா போல கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மையை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

மறுபக்கம் தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதன்முறையாக கைகோர்த்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ளது  இந்த திரைப்படத்தில் விஜய் மிகப்பெரிய ஒரு கோடீஸ்வரராக நடித்துள்ளார் அவருடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க புதிய புதிய அப்டேட்களை கொடுப்பது மற்றும் பெரிய பெரிய கட் அவுட் மற்றும் பேனர்களை வைத்து அசத்திய வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் சென்னையில் உள்ள பிரபல ஜோதி திரையரங்கில் போட்டி போட்டுக்கொண்டு இரண்டு படங்களின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது அதில் விஜய்யின் பேனர் பெரிசாக கீழே வைக்கப்பட்டிருக்கிறது ஆனால் அதற்கு மேலே அஜித்தின் துணிவு பேனர் வைக்கப்பட்டுள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..