லியோ படத்தின் கதைகளம் இது தான்.! வெளியான தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிய பின்னர் கார்த்தியை வைத்து கைதி என்ற மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமையவே அடுத்ததாக நடிகர் விஜய் உடன் இணைந்தார் இயக்குனர் லோகேஷ்.

இவர்கள் கூட்டணியில் முதல் முறையாக உருவான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மூன்று படங்களையும் ஹட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நான்காவது படத்தையும் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக கொடுத்தார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் ரசிகர்களால் தூக்கி கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 67ல் மீண்டும் இணைந்துள்ளனர் இந்த படத்திற்கு லியோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியானது இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக இந்த படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்று கூறி வருகிறார்கள் அந்த வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது கைதி மற்றும் விக்ரம் படங்களில் போதை பொருளால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேசியுள்ள லோகேஷ் கனகராஜ் லியோ படத்திலும் அதே போதை பொருளை மையமாக வைத்து தான் இயக்கி வருகிறாராம். அது மட்டுமல்லாமல் லியோ படத்தில் சர்வதேச அளவிலான போதை பொருள் பிரச்சனையைப் பற்றி பேச இருக்கிறாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இது வரைக்கும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது மெகா ஹிட் படத்தை இயக்கி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வந்த உடனே ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். அது மட்டுமல்லாமல் ப்ரொமோவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment