சூர்யாகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை தடுக்க ஒரே வழி இதுதான் – பவுலர்களுக்கு ஐடியா கொடுத்த NZ வீரர்.

கடந்த சில வருடங்களாக சூரியகுமார் யாதவ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி பெறுகிறார் அதனால் இந்திய அணியின் வெற்றி பிரகாசமாக இருந்து கொண்டே இருக்கிறது. சூரியகுமார் யாதவ் மற்ற வீரர்களை போல் இல்லாமல் வந்தவுடனேயே அடிப்பதையே பார்க்கிறார் குறைந்தது மூன்று பந்துகளில் ஒரு பவுண்டரி அடிப்பதை அவரது குறிக்கோளாக வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதற்கு ஏற்றார் போல கடந்த முடிந்த நியூசிலாந்து உடனான 20 ஓவர் இரண்டாவது போட்டியில் அவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பவுலர்களை பறக்க விட்டார். 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து விளாசினார் இதில் 11 பவுண்டரி 7 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாகுமார் யாதவின் சைக் ரேட் குறைந்தது 150 லிருந்து 200 வரை இருப்பதாக கூறப்படுகிறது.

இவரை எந்த ஒரு பவுலராலும் இதுவரை தடுத்து நிறுத்தவே முடியவில்லை நாலா பக்கமும் சுத்தி சுத்தி அடிக்கிறார். இவரை தடுப்பதற்கு என்னதான் வழி என்று தெரியாமல் இருந்து வருகின்றனர் இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ராஸ் டெய்லர் பேசியது. சூர்யாகுமார் யாதவ் போட்டியில் ரிஸ்க் எடுத்து அடிக்கிறார் குறிப்பாக ஸ்பின்னர்களை எதிராக இன்சைட் அவுட் ஷாட் மிகவும் ரிஸ்க்கானது.

மேலும் லாக்கி பெர்குசனை சிக்ஸர் பறக்க விட்ட விதத்தில் அவருக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்து வந்துள்ளது என நினைக்கிறேன் அந்த போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் உள் வட்டத்திற்குள் இருந்ததை பயன்படுத்தி அவர் மேலே தூக்கி தூக்கி அடித்தார் இருப்பினும் இன்னும் அவர் கற்றுக் கொள்வதற்கு நிறைய நுணுக்கங்கள் உள்ளது அதே சமயம் தற்போது அவர் சிறந்த ஷாட்டுகளை விளையாடி வருகிறார்.

எப்படி போட்டாலும் அடிப்பேன் என்ற வகையிலேயே அவர் விளையாடுகிறார். சூர்யாகுமார் யாதவுக்கு பந்து வீசுவதை விட எதிர்ப்புறம் இருக்கும் இந்திய பேட்ஸ்மனுக்கு  பந்து வீச முயற்சியுங்கள் அதுவே அவரை நிறுத்துவதற்கான வழி என்று ராஸ் டைலர் கூறியுள்ளார். அவரும் ஒரு மனிதர் தான் அவர் செய்யும் தவறுகளை சரியாக பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என பவுலர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளாராம்..

Leave a Comment