20 வருடங்களாக அஜித்தின் திரைப்படத்தை ஒளிபரப்பாமல் இருக்கும் ஒரே டிவி சேனல் இதுதான்.! ஆனால் விஜய்யின் திரைப்படம் மட்டும் வாரத்திற்கு இத்தனை முறையா.?

தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஆவார். இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, அதே போல் இவர்களின் திரைப்படம் திரைக்கு வந்தால் ரசிகர்கள் திரையரங்கத்தை அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.

பால் அபிஷேகம், கட்டவுட், வெடிகள், மேளதாளம் என கொண்டாட்டம் அதிகமாக இருக்கும், தற்பொழுது தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் கொண்டே போகிறது அதேபோல் தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஊரடங்கால் படப்படிப்பு தடைபெற்றுள்ளது.

அதேபோல் அஜித், விஜய் திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாளும் டிஆர்பி ரேட்டிங் உச்சத்தைத் தொடும். இந்த நிலையில் டிவி சேனல் தொடங்கி 26 வருடங்கள் ஆகியும் தல திரைப்படத்தை ஒரு முறை கூட ஒளிபரப்பாமல் இருக்கிறது பிரபல சேனல்.

அட அவங்க வேற யாரும் இல்லைங்க நம்ம ஸ்டார் விஜய் தான், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தான் இதுவரை அஜித்தின் திரைப்படங்களை ஒளிபரப்பாமல் இருக்கிறது, ஆனால் விஜயின் திரைப்படத்தை வாரத்திற்கு பல முறை ஒளிபரப்பி விடுகிறார்கள், அதுவும் விஜய் சூப்பர் சேனலில் சொல்லவே வேண்டாம் அடிக்கடி விஜய்திரைப்படம் ஒளிபரப்புவார்கள்.

ஆனால் அஜித்தின் திரைப்படத்தை இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்ப வில்லையாம் இது தான் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது, பெரும்பாலான அஜித் திரைப்படத்தை ஜெயா டிவி மற்றும் சன் டிவி ஆகியவை முந்திக்கொண்டு வாங்கி விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இதில் சன் டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி போன்ற டிவி சேனல்கள் அஜித்தின் பல படங்களை ஷேர்  செய்துள்ளார்கள்.

அதாவது மூன்று டிவி சேனல்களிலும் அஜித் திரைப்படத்தை போட்டுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது, பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்களை சன் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் போன்ற பெரிய சேனல்கள் அஜித் பட தயாரிப்பாளர்களுக்கு நெருங்கிய வட்டாரமாக இருப்பதால் மிக எளிதாக அஜித் திரைப்படத்தை கைப்பற்றி விடுகிறார்கள்.

அப்படி இருந்த பொழுதும் அஜித்தின் பிங்  திரைப்படத்தின் ஹிந்தி உரிமம் ஸ்டார் விஜய் இடம் தான் உள்ளது ஆனாலும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை ஜீதமிழ் வாங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது, சன் தொலைக்காட்சி போன்ற பெரிய டிவி சேனல்கள் அஜித் படத்தை ஒளிபரப்பும் போது விஜய் தொலைக்காட்சியால் அஜித் திரைப்படத்தை வாங்க முடியவில்லை என்பதுதான் கொடுமையாக இருக்கிறது.

பெரும்பாலும் சன் தொலைக்காட்சி முன்னணி நடிகர்களின் படத்தின் பூஜை ஆரம்பிக்கும் போதே வாங்கி விடுகிறார்கள் அதனால் மற்ற சேனல்களுக்கு கிடைப்பது கஷ்டம்தான்.

Leave a Comment