தல படத்திற்கு இசையமைக்கும் போது என் மனதில் இது ஒன்று மட்டுமே இருக்கும்.! யுவன் சங்கர் ராஜா பளீர் பேட்டி

பல ஹிட் படங்களுக்கு இசை அமைத்து தன்னை சினிமா உலகில் நிலைநிறுத்திக் கொண்டவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா.

அதிலும் குறிப்பாக அஜித் படத்திற்காக கூடுதலாக கவனத்தை செலுத்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அதற்கு காரணம் இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது  அதனை பல மேடைகளில் தெரிவித்துள்ளார்.

இவர் அஜித்திற்காக பில்லா, மங்காத்தா, நேர்கொண்ட பார்வை தற்பொழுது வலிமை ஆகிய பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் யுவன்சங்கர்ராஜா வலிமை படத்தின் இசை குறித்து சில கருத்துகளை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தார்.

சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் அஜித்தின் வலிமை படத்தைபற்றி  பத்திரிகையை பேட்டி கொடுத்தார்.

அப்போது பதில் அளித்த அவர் அஜித்தின் படத்திற்காக இசையமைக்கும் போது அவருடைய கேரக்டரை மட்டுமே மனதில் கொண்டு இசையமைப்பேன் என கூறினார்

அஜித் போலீஸ் அல்லது டான் போன்ற எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறோ அதற்கு ஏற்றவாறு தனது பின்னணி இசையை கம்போஸ் செய்வேன் என பதிலளித்தார்

அதனால்தான் அஜித் திரைப்படங்களில் சிறந்த இசையை கொடுக்க முடிகிறது அதேசமயம் அவர் எந்த ஒரு நிபந்தனையும் வைக்க மாட்டார் என தெரிவித்தார்.

அது போன்றது தான் வலிமை திரைப்படத்திலும் எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

yuvan
yuvan

மேலும் விரைவில் தயாரிப்பாளர் இப்படத்தின் அப்டேட்டை தெரிவிப்பார் என கூறினார். படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை முழுமையாக சந்தோஷ் படுத்த கூடுதலாக இசையமைத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment