இந்த ஒரே காரணத்தினால் தான் சினிமாவில் குதித்தேன்..! பாஜக தலைவர் ஓபன் டாக்..!

annamalai
annamalai

முன்பெல்லாம் சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கும் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது வழக்கமான ஒரு செயல் தான் அந்த வகையில் தற்போது அரசியலில் பிரபலமாக இருக்கும் தலைவர்களும் கூட சினிமாவில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் தற்போது பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்கள் சினிமாவில் முதன்முதலாக கால்தடம் பதிக்க உள்ளார். இவ்வாறு லீக்கான செய்தியானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தான் அண்ணாமலை குப்புசாமி இவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இவ்வாறு பிரபலமான நமது தலைவர் சிறந்த அரசியல்வாதி மட்டுமின்றி காவல்துறை அதிகாரியும் கூட அந்த வகையில் இந்திய குடியியல் பணிகள் தேர்வு எழுதி பல நேர்காணலை சந்தித்த நமது தலைவர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார் மேலும் இவர் பல மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றியுள்ளார்.

பின்னர் தன்னுடைய விருப்பத்தின் காரணமாக பணியை விட்டுவிட்டு தற்போது அரசியலில் குதித்துள்ளார் அந்த வகையில் 2001ஆம் ஆண்டு பாஜக தலைவராக பொறுப்பேற்ற நமது அண்ணாமலை கர்நாடகா சிங்கம் என்று தான் இவரை பலரும் அழைக்க ஆரம்பித்தார்கள் அதுமட்டுமில்லாமல் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள்.

annamalai-4
annamalai-4

மேலும் இவர் அரசியலில் இறங்கிய நாளிலிருந்து இவருடைய பேச்சுக்களும் கருத்துக்களும் சோசியல் மீடியாவில் மிக வைரலாக பரவி வந்தன இதனை பல்வேறு எதிர்கட்சிகளும் விமர்சனம் செய்து வருவது வழக்கமான செயல்தான். அந்த வகையில் கலைஞர் கருணாநிதி பற்றியும் மு க ஸ்டாலின் பற்றியும் அண்ணாமலை பேசியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

annamalai-3
annamalai-3

இது ஒருபக்கம் இருக்க தற்போது பல்வேறு அரசியல்வாதிகளும் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நிலையில் நமது பாஜக தலைவர் அண்ணாமலையும் சினிமாவில் இறங்க ஆரம்பித்துள்ளார் அந்த வகையில் இரண்டு கைகள் இல்லாமல் நீச்சல் போட்டியில் சாதனை புரிந்த ஒரு விசுவாசி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து நடிக்கவுள்ளாராம் இதில் அண்ணாமலை நீச்சல் பயிற்சியாளராக நடிக்க உள்ளார்.

annamalai-2
annamalai-2

மேலும் இந்த திரைப்படத்தின் கதையை கேட்டவுடன் எனக்கு இந்த திரைப்படத்திற்காக ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் போதும் என கூறிவிட்டாராம் மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ரிலீஸுக்கு ரெடி ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்கள்.

annamalai-1
annamalai-1