புதிய கண்ணம்மா இவர் தான் – ப்ரோமோவை பார்த்து கதறும் ரசிகர்கள்.! என்ன இப்படி பண்ணிட்டாங்க..

சீரியல்களில் இருக்கும் பெரும்பாலான சீரியல் நடிகைகள் பலரும் சினிமாவுலகில் பட வாய்ப்பை கைப்பற்றி ஓடிக்கொண்டிருக்கின்றனர் அந்த காரணத்தினால் தற்போது சீரியலில் நடிகர்கள் நடிகைகள் மாற்றப்பட்டு வருகின்றன அதிலும் விஜய் டிவி பிரபலங்கள் சொல்லவே வேண்டாம் அதிக பிரபலங்கள் பட வாய்ப்பை கைப்பற்றி ஓடுகின்றன.

அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயன், சிவானி நாராயணன் போன்றவர்களைத் தொடர்ந்து தற்போது பல பிரபலங்களும் பயணிக்கின்றனர் அவர்களில் ஒருவராக தற்பொழுது போய் உள்ளவர்தான் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷினி. இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பாக மாடலிங் துறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆள் பார்ப்பதற்கு சற்று கருப்பாக இருந்தாலும் திறமை இருந்ததால் இவரை பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது அதிலும் தனது திறமையை அழகாக காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மனதிலும் குடியேறினார்.

சீரியலில்செண்டிமெண்ட் ரோமன்ஸ் ஆக்சன் போன்ற அனைத்து விதமான காட்சிகளிலும் சிறந்த பங்களிப்பை கொடுத்து ஓடிக்கொண்டிருந்த கண்ணம்மா என்கின்ற ரோஷினி திடீரென சினிமா வாய்ப்புகள்  கிடைதத்து. அதனால் தற்போது இந்த சீரியலை விட்டு வெளியேறினார் இவரது கதாபாத்திரத்தில் வேறு யார் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நட்சத்திரா பாரதிகண்ணம்மா சீரியலில் ரோஷினி கதாபாத்திரத்தில் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் அவர் இதில் நடிக்க வில்லை தற்போது இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி என்கின்ற ஒரு பிரபலம் தான் நடிக்க உள்ளார் என்ற தகவல் சமீபத்தில் எழுந்தது அது கிட்டத்தட்ட தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளத. பாரதிகண்ணம்மாவின் புதிய புரோமோவில் வினுஷா தேவி தான் இருக்கிறார் இதோ அந்தப் புதிய ப்ரோமோவை நீங்களே பாருங்கள்.

Leave a Comment