இதற்குப் பெயர்தான் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதா..! மாஸ்டர் பிளான் போட்ட உதயநிதி..!

திரை உலகில் பிரபல நடிகராகவும் சிறந்த அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் உதயநிதி ஸ்டாலின் இவர் திமுகவில் எம்எல்ஏவாக பணியாற்றி வருகிறார். இவ்வாறு பிரபலமான நடிகர் சமீபத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் உதயநிதி அவர்கள் இனிமேல் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் முழு கவனத்தை செலுத்த போகிறேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் வெளிவந்த திரைப்படம் ஆனது பாலிவுட்டில் வெளியான ஆர்டிகள் 15 என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும் இந்த திரைப்படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டுமில்லாமல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது வந்துள்ளது.

மேலும் நடிகர் உதயநிதி அவர்கள் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாமன்னன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இதில் கீர்த்திசுரேஷ் வைகைபுயல் பகத் பாசில் போன்ற பல்வேறு பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமானை வைத்து இசை அமைத்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தை எடுக்கும்பொழுது எனக்கு பத்து இருபது ஷார்ட் மட்டுமே எடுக்கப்பட்டது.

ஆனால் மாமன்னன் திரைப்படத்தில் 50க்கும் மேற்பட்ட டேக் எடுக்கப்பட்டுள்ளது அதேபோல இந்த திரைப்படத்தை டயலாக் மக்களுக்கும் அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். மேலும் வெறும் 60 நாட்களில் இந்த திரைப்படத்தை முடிக்கபோவதாகவும் உதயநிதி கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைபடம் தான் தனது கடைசி திரைப்படமாக அமைய போகிறது என உதயநிதி கூறியுள்ளார் தற்சமயம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சர் பதவிக்கு தேர்வாகும் நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய முழு வேலையாகவும் அரசியலைக் கொண்டு செல்லப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Comment