சின்ன வயதில் நான் பார்த்து வியந்த படம் இது தான் – மனம் திறக்கும் வெற்றிமாறன்.! யார் படம் தெரியுமா அது.?

0

சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி தயாரிப்பாளராக இறங்கி அதிலும் வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் காக்கா முட்டை போன்ற சிறப்பம்சம் உள்ள படங்களை தயாரித்து வந்த இவர் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் என்ற திரைப்படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க வித்தியாசமான திரைப்படங்களையும் தற்போது கொடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் விஜய் சேதுபதி சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை எடுக்கிறார் இதை தொடர்ந்து அவர் சூர்யாவுடன் இணைந்து ஒரு புதிய படத்தையும் உள்ளார்.

இதனால் வெற்றி மாறனின்  திரைவாழ்க்கை உச்சத்தைத் தொட்டு கொண்டு வருகிறது. இந்த நிலையில் வெற்றிமாறன் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது வெற்றிமாறன் பத்தாவது படிக்கும்போது ரஜினியின் தீவிர ரசிகர் ஆகவே இருந்தாராம். காரணம் அப்போது தளபதி திரைப்படத்தை பார்த்த வெற்றிமாறன் தன்னை மறந்து ரஜினியின் ரசிகராக மாறியதோடு மட்டுமல்லாமல் இயக்குனர் மணிரத்தினத்தின் ரசிகராகவும் மாறினாராம்.

இச்செய்தியை இணையதள பகிரப்பட்டு வருவதோடு ரஜினி ரசிகர்கள் தற்போது இந்த செய்தியை கொண்டாடியும் வருகின்றனர்.