நேற்றைய போட்டியில் நாங்கள் செய்த தவறு இதுதான் வெளிப்படையாக சொன்ன ஷீகர் தவான் – சூப்பர் செய்தி இதோ.

0

இந்திய அணி இலங்கையுடன் 3 ஒருநாள் போட்டிகளில் முதலில் விளையாடி வருகிறது. இந்த மூன்று போட்டிகளில்  2- 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி னாலும் கடைசி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது காரணம் புதுமுக வீரர்கள் சிலர் இந்த அணியில் சேர்க்கப்பட்டிருந்தது தான் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

தொடக்கத்தில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி இருந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன இதனால் 47 ஓவர்களில் 225 இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது. பின் இலங்கை அணி தொடக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

மேலும் அணியின் வெற்றியை அப்பொழுதே உறுதி படுத்தியது மேலும் கடைசியில் 3 விக்கெட் இருக்கும்பொழுதே வெற்றியை ருசித்தது இலங்கை அணி. போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் தோல்வி குறித்து பேசியுள்ளார் அவர் கூறியது.

இன்றைய போட்டி எங்கள் அணியின் வழியில் செல்லவில்லை நாங்கள் சில புதுமுக வீரர்கள் இந்த போட்டியில் முயற்சித்தோம். எங்களுக்கு நல்ல தொடக்கம் இருந்தும் மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம் இதன் காரணமாகவே 50 ரன்கள் குறைவாகவே எடுத்துவிட்டோம்.

இருப்பினும் அடுத்தடுத்து வரவுள்ள போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து. தொடரை கைப்பற்றுவதோடு அனைத்து போட்டிகளும் வெல்வோம் என ஷிகர் தவான் கூறினார்.