மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவ முக்கிய காரணம் இதுதான் – தவான் பளீர் பேட்டி.

இந்திய அணி இலங்கையுடனான மூன்றாவது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியஅணி பேட்டிங் விளையாட தீர்மானித்தது. தொடக்கத்திலேயே இந்திய அணியின் கேப்டன் தவான்  ஆட்டமிழந்து வெளியேற மறுமுனையில் இருந்த புதுமுக வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற ஆரம்பித்தனர்.

இதனால் இந்திய அணி குறிப்பிட்ட இலக்கை கூட நெருங்க முடியாமல் திணறியது மேலும் இலங்கை அணி பவுலிங் பட்டையை கிளப்பியதால் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து கொண்டே இருந்தது இதனால் இந்திய அணி அழுத்தத்தின் காரணமாக எடுக்க முடியாமல் திணறியது விக்கெட்டுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்ததால் ஒரு கட்டத்தில் மிக குறைந்த ஸ்கோரை தீர்மானித்தது.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2, 3 விக்கெட்டுகளை கொடுத்து  இருந்தாலும் ஒரு கட்டத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்தது. போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் தவான் கூறியது நாங்கள் ஆரம்பத்திலேயே பேட்டிங்கில் நிலைக்கு வந்து விட்டோம்.

அதனால் அழுத்தத்தின் காரணமாக எங்கள் அணி ரன்களை சேர்க்க முடியாமல் போனது இந்த போட்டியில் தோல்வி அடைந்தற்கு முக்கிய காரணம் எங்களது மட்டை வீச்சு சரியில்லை என குறிப்பிட்டார். மேலும் இலங்கை அணி சிறப்பாக பந்து வீசியதோடு தொடரை கைப்பற்றி உள்ளது என சொன்னார்.

இளம் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும்  சில தவறுகளை செய்ததால் தொடரை வெல்ல முடியாமல் போனது.

Leave a Comment

Exit mobile version