என் படத்தில் தவறுகள் நடக்க முக்கிய காரணம் இதுதான்.? சரியான நேரத்தில் கண்டுபிடித்த சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் கமர்சியல் கலந்த படங்களில் நடிப்பதை ஆரம்பத்திலிருந்து வைத்திருக்கிறார் அந்த படங்களும் ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் செய்கின்றன இதனால் சினிமா உலகில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறார் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் தான் டான்.

இதற்கு முன்பாக அவர் நெல்சன் உடன் கை கொடுத்து நடித்த டாக்டர் திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்று 100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடதக்கது இருப்பினும் சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் ஒரு சில படங்களும் சறுக்கலை சந்தித்து உள்ளன அதற்கான காரணத்தையும் அண்மையில் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் விளக்கமாக சொல்லி உள்ளார்.

என்னுடைய படத்தில் சில சொதப்பல்கள் வர என்ன காரணம் என்பதில் நாங்கள் ஒவ்வொரு படத்தின் பொழுதும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறோம் அதாவது ஒரு படம் வெளியாகி வெற்றி பெறாமல் தோல்வி படங்களாக மாறுகின்றன அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் படத்தின் கருவிலேயே பிரச்சனை இருப்பதாக கூறினார்.

நா ன் தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்து வருவதால் இப்படத்தை பற்றி இருபது பேரிடம் கருத்துக் கேட்டால் ஒவ்வொருவரும் வெவ்வேறு வார்த்தைகளில் தங்களது விமர்சனத்தை கூறுவார்கள் ஆனால் அதை அனைத்தையும் ஒன்று சேர்ந்து பார்த்தால் ஒரு விஷயத்தை தான் வேறு மாதிரியாக சொல்லி இருப்பார்கள்.

அதனால் ஒவ்வொரு படங்களிலும் தாங்கள் செய்த  தவறை அடுத்த படத்தில் இல்லாமல் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதன் காரணமாகவே நடிகர் சிவகார்த்திகேயன் கதையை கேட்டபின் தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அந்த அந்த படங்களில் நடிக்க சம்மதம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment