எனது உடல் எடை அதிகமாக ஏற முக்கிய காரணம் இது தான் – மனவருத்தத்துடன் சொல்லும் நடிகை மஞ்சுமா மோகன்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஃபிட்டாக இருக்கும் நடிகைகளுக்கு மட்டுமே பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கின்றனர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள். அதை நன்கு உணர்ந்து கொண்ட இளம் நடிகைகள் பலரும் தற்போது உடல் எடையை  குறைத்து  கொண்டு வளைவு நெளிவான தனது அழகை மாற்றிக் கொண்டு வலம் வருகின்றனர்.

சினிமாவில் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகைகளும் தற்பொழுது இதனைப் பின்பற்றியே பட வாய்ப்பை பெறுகின்றனர். ஒரு சில நடிகைகள் தன் உடல் எடையை குறைக்க முடியாமல் அல்லல் படுவதோடு மட்டும் அல்லாமல் பட வாய்ப்புகள் ஒவ்வொன்றும் அவரைவிட்டு நழுவுகிறது அந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளவர்தான் நடிகை மஞ்சிமா மோகன்.

நம்ம நடிகை மஞ்சிமா மோகனுக்கு திறமை இருந்தாலும் தற்போது உடல் எடையை அதிகரித்துள்ளதால் வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரசிகர்கள் இவரை சமூக வலைதளப் பக்கத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் தனது உடல் எடையை குறித்து அவர் குறிப்பிட்டுப் பேசி உள்ளார். தற்போது உடல் எடையை அதிகரித்து உள்ளேன் அதற்கு காரணம் எனது காலில் ஒரு சர்ஜரி ஒன்று செய்யப்பட்டது அதன் பிறகு எனக்கு உடல் எடை ஏறியது.

manjuma mohan
manjuma mohan

அதை குறைக்க நான் முயற்சி செய்து வருகிறேன் ஆனால் அதற்குள் என்னை ரசிகர்கள் பலரும் விமர்சித்தும் கிண்டலடித்து வருவதால் ரொம்பவும் மனமுடைந்து காணப்படுகிறேன் விரைவில் உடல் எடையைக் குறைத்து படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பேன் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என அவர் குறிப்பிட்டு பேசி உள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment