ரஜினியின் “அண்ணாத்த” படம் தோல்வியை சந்திக்க முக்கிய காரணம் இவுங்க தான்.. பிரச்சனையை கிளப்பி விடும் பிரபலம்.!

0
rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 90 காலகட்டங்களில் ரசிகர்கள் மத்தியில் கொடிகட்டி பறந்தார். தற்போது ரஜினியை தொடர்ந்து பல நடிகர்கள் ரசிகர்களை கவரும்படியான படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றனர் இருந்தாலும் ரஜினி இப்பொழுதும் நம்பர் ஒன் நடிகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரஜினிக்கு வயதாகிக்கொண்டே செல்வதால் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் அவ்வப்போது மருத்துவமனைக்கும் சென்று வருகிறார். இருந்தாலும் ஓரிறு வருடங்களுக்கு ஒரு படமாவது ரசிகர்களுக்காக கொடுத்து வருகிறார். தற்போது நெல்சன் உடன் இணைந்து ஜெயிலர் என்னும்  படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் தான் தொடங்கப்பட்டு போய்க்கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் கடைசியாக ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சிவா சிறுத்தை படத்திற்கு பிறகு அவர் இயக்கிய வீரம், விசுவாசம் ஆகிய படங்களில் அதிகம் சென்டிமென்ட் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

அது அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. ஆனால் ரஜினி சிவா கூட்டணியில் உருவான அண்ணாத்த படம் மக்களை அதிகம் கவரவில்லை. இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா தான் என திட்டவட்டமாக ஒருவர் கூறி இருக்கிறார்.

ரஜினியின் உடல்நிலை காரணமாக ரஜினி எங்கு சென்றாலும் அவருடைய இரு மகள்களில் ஒருவர் அங்கு சென்று விடுவார்களாம். அப்படி அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் இருக்கு சென்ற ரஜினியின் மகள்கள் அப்பாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு படத்தின் காட்சிகளில் ஈடுபடுவார்களாம். இதனால் தான் இந்த படம் தோல்வியை சந்தித்தது என சவுக்கு சங்கர் என்பவர் கூறியுள்ளார்.