அம்மா கணக்கு திரைப்படத்தில் அமலாபாலுடன் நடித்த சின்ன பொண்ணா இது.? புகைப்படத்தை பார்த்து பிரமிக்கும் ரசிகர்கள்..

0

சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஏராளமான நடிகைகள் தற்போது தங்களது பருவ வயதை அடைந்து முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் 2016ஆம் ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற அப்பா திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் யுவஸ்ரீ லக்ஷ்மி. அப்பா திரைப்படத்தில் நடித்திருந்த அனைத்து குழந்தை கதாபாத்திரங்ளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இடித்தது.

அந்தவகையில் யுவஸ்ரீ லட்சுமி  இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என்று அனைவரையும் கவர்ந்தார்.

இந்தத் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் அமலாபால் நடிப்பில் வெளிவந்து அனைத்து பெண் குழந்தைகளுக்கும் நல்ல கருத்தை கூறும் வகையில் அமைந்த திரைப்படம்தான் அம்மா கணக்கு இந்த திரைப்படத்தில் அமலாபாலுக்கு மகளாக யுவஸ்ரீ லக்ஷ்மி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு பிறகு சிறிது காலம் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்பொழுது மற்றொரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

YUVASRI LAKSHMI
YUVASRI LAKSHMI

அதாவது இவர் நினைவெல்லாம் நீயடா என்ற காதல் திரைப்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது நினைவெல்லாம் நீயடா படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பா திரைப்படத்தில் நடித்த குழந்தையா இது என்று அச்சிரியப்பட்டு வருகிறார்கள்.