சர்தார் படத்திலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான் வெளிப்படையாக பேசிய நடிகர் கார்த்தி..!

நடிகர் கார்த்தி இந்த ஆண்டில் நல்ல நல்ல படங்களை கொடுத்திருக்கிறார் அந்த வகையில் விருமன், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன இந்த படங்களை தொடர்ந்து இந்த ஆண்டில் வெளிவந்து வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் சர்தார் இந்த படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியிருந்தார்.

கார்த்தி நடித்திருந்தார் இந்த படம் முழுக்க முழுக்க தண்ணீர் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்தது. இந்த படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து லைலா, ராசி கண்ணா, முனிஷ் காந்த், ரதிஷா விஜயன் மற்றும் பலர் நடித்திருந்தனர்  படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்றதால் ரசிகர்களும் மக்களும் படத்தை கொண்டாடினர் மேலும் படத்தை கூட்டம் கூட்டமாக பார்க்கத் தொடங்கினர்.

அதன் காரணமாக படமும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது இதுவரை நல்ல வசூலை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சர்தார் படக்குழுவும், கார்த்தியும் அண்மையில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டனர் அப்பொழுது கார்த்தி இடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக தண்ணீர் பாட்டில் பிரச்சனை குறித்து கேள்வி கேட்டனர் அதற்கு பதில் அளித்த அவர் நான் அமெரிக்காவில் இருந்து இருக்கிறேன்.

அங்கெல்லாம் தண்ணீர் பாட்டில் கேட்டால் கூலிங் தண்ணீர் தான் கொடுப்பார்கள் சாதாரணமாக இருக்கும் தண்ணீரை கொடுக்க மாட்டார்கள் காரணம் பிளாஸ்டிக் பாடலில் உள்ள நச்சுக்கள் தண்ணீரில் கலந்து விடும் என்ற காரணத்தினால் அமெரிக்காவில் எல்லாம் தண்ணீரை ஃப்ரிட்ஜில் தான் வைத்திருப்பார்கள் ஆனால் நம்முடைய நாட்டில் அதை பாலோ செய்வது கிடையாது பொதுவாக நாம் வெளியில் செல்லும் போது தண்ணீர் நம்மால் கொண்டு செல்ல முடியும்.

ஆனால் எல்லோரும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை தான் வாங்கி குடிக்கிறோம் இதை எல்லோரும் வழக்கமாக வைத்து விட்டார்கள் நான் இப்பொழுது 10 லிட்டர் வாட்டர் பாட்டிலை வீட்டிலிருந்து எடுத்துச் செல்கிறேன் இந்த படத்தின் கதையை பி.எஸ். மித்ரன் கூறும் பொழுது நான் இதை செய்ய ஆரம்பித்து விட்டேன். ஆனால் என்னுடைய மனைவி இதற்கு முன்பிருந்தே தண்ணீரை  எடுத்துக்கொண்டு தான் செல்வார்கள் தண்ணீரை நாம் முடிந்தவரை எடுத்துக்கொண்டு செல்வதன் மூலம் நோயிலிருந்து தவிர்க்கலாம் என கூறியுள்ளார்.

Leave a Comment