லக்னோ அணிக்காக நீ செய்ய வேண்டிய வேலைகள் இதுதான்.? புட்டு புட்டு வைத்த கம்பீர்.. கே. எல். ராகுல் செய்து காட்டுவாரா.?

0

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இப்பொழுது வரையிலும் ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது இதுவரை14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி கோலாகலமாக 15 வது சீசன் தொடங்கி உள்ளது. இதுவரை IPL லில் 8 அணிகள் விளையாண்டு வந்தநிலையில் இப்போ லக்னோ மற்றும்  குஜராத் ஆகிய அணிகள் புதிதாக..

சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இன்னும் ஐபிஎல் தொடங்க ஒரு நாள் மட்டுமே இருப்பதால் அனைத்து அணிகளும் தீவிர வளை பயிற்சி மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு அணியும் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் அந்தந்த ஐபிஎல் அணி ஆலோசகர்கள் கருத்துகளை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக இருப்பவர் கௌதம் கம்பீர்.  இவர் லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கி உள்ளார். லக்னோ அணியின் கேப்டனாக ராகுல் சிறப்பாக செயல்படுவது மட்டுமன்றி  ரன் குவிப்பதும் மிக முக்கியம்.

கே. எல். ராகுல் தனது பேட்டிங்கில் அச்சமின்றி விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் ஏனெனில் தற்போது அவருக்கு நல்ல பேட்டிங் பார்ம் இருக்கிறது எனவே அவர் பயமின்றி எந்த அச்சமுமின்றி சிறப்பாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் அவருக்கு அனைத்து விதமான சுதந்திரமும் கிடைக்கும் மேலும் துணிச்சலான முடிவுகளை கற்றுக்கொள்ள வேண்டும்.

பேட்டிங்கில் ரன்களை குவிக்க வேண்டும் அதுமட்டுமின்றி துணிச்சலான முடிவுகளை எடுக்கும் கேப்டனாகவும் கே .எல். ராகுல் திகழ வேண்டும் என கூறி உள்ளார் மேலும் தொடர்ந்து பேசிய அவர் பேட்டிங்கில் ரிஸ்க் எடுக்காவிட்டால் வெற்றி கிடைக்காது எனவே ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டியது அவசியம்.