விஜயின் 50 வது திரைப்படத்திற்கு முதலில் இந்த பெயர் தான் வைக்கப்பட்டது.! அதன் பிறகு தான் சுறா எல்லாம்…

0

thalapathy vijay 50th movie:தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய். விஜயின் 50வது படமான சுறா திரைப்படத்தினை எஸ்பி ராஜ்குமார் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடித்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் காமெடியில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டுறிந்த வைகைப்புயல் வடிவேல் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர், நடிகைகளும் நடித்திருந்தார்கள்.

இத்திரைப்படம் விஜய்யின் 50வது திரைப்படம் என்பதால் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இப்படம் திரைக்கு வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வியடைந்தது. ரசிகர்களுக்கும் இப்படம் பெரும் ஏமாற்றத்தை தந்தது எனேன்றால் படத்தின் மொத்த பட்ஜெட் 15 கோடி ஆனால் இப்படம் 10 கோடி வசூலித்தது என்று சிலரால் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனரான எஸ்பி ராஜ்குமார் முதலில் நம்ம வீட்டு பிள்ளை என்று தான் பெயர் வைத்திருந்தாராம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் விஜய் சுறா என்றே வைத்துக்கொள்ளலாம் என்று கூறினாராம் இந்தப் பெயரே நல்லா இருக்கு என்று இப் பெயரையே வைத்துவிட்டார்கள் இதனை ராஜ்குமார் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.