உலகநாயகன் கமலஹாசன் அவ்வை சண்முகி படத்திற்காக போட்ட முதல் பெண் கெட்டப் இதுதான்.! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்.

80, 90 காலகட்டங்களில் இருந்து சினிமா உலகில் நடித்து வரும் உலக நாயகன் கமலஹாசன் இதுவரை பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் இவர் அளவுக்கு எந்த ஒரு நடிகரும் இவ்வளவு கெட்டப் போட்டதே கிடையாது.

அந்த அளவிற்கு கெட்டப் போட்டு நடித்து அசத்திய தற்போது மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளதோடு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தையும்  இதுவரையிலும் தக்க வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக பெண் கெட்டப்பில் கமல் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் சூப்பர் ஹிட் தான்.

அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அவ்வை சண்முகி. இந்த திரைப்படம் காமெடியாகவும் அதே சமயம் நல்ல கருத்தை சொல்லும் படியாகவும் இருந்ததால் இந்த திரைப்படம் அப்போது சூப்பர் ஹிட் அடித்தது.

மேலும் அதிக நாட்கள் ஓடிய மிகப்பெரிய வசூல் வேட்டையும் அவ்வை சண்முகி பெற்றது.  இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து ஜெமினி கணேசன், மீனா, மணிவண்ணன் போன்ற பலர் நடித்து அசத்தியிருப்பார்கள். இப்பொழுது கூட இந்த திரைப்படம் டிவியில் வெளிவருவதால் இளசுகள் முதல் பெரியவர் வரை பார்த்து கொண்டாடுகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் அவ்வை சண்முகி திரைப்படத்திற்காக உலகநாயகன் கமலஹாசன் முதன்முதலாக பெண் வேடம் போட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில்  கசிந்து தீயாய் பரவி வருகிறது இது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

kamal
kamal
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment