முதலும், கடைசியுமாக ரஜினிகாந்த் நடித்த விளம்பரம் இதுதான்.! வைரலாகும் வீடியோ..

0

தென்னிந்திய சினிமாவில் 47 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இது நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் பெற்ற வந்த நிலையில் சமீப காலங்களாக கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம் வயதான காரணத்தினால் இவருக்கு சுறுசுறுப்பு இல்லை ஆனாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதனால் ரஜினி மார்க்கெட் குறைந்த இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் ரசிகர்கள் மத்தியில் இதற்கு தற்பொழுது வரையிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முறையாக நெல்சன் திலிப் குமாருடன் இணைந்து தனது 169 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் கூடிய விரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.இந்தத் திரைப்படத்தில் தமன்னா,ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் என பலரும் இணைந்து நடிக்கிறார்கள். எனவே இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.இவ்வாறு மிகவும் பிசியாக முன்னணி நடிகராக கலக்கி வரும் இவர் விளம்பரங்களில் நடித்ததில்லை என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் ரஜினிகாந்த் சினிமாவில் தன்னுடைய இளம் வயதில் பிரபலமடைந்த நேரத்தில் ஒரே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

ஆம், அதாவது ரஜினிகாந்த் கோக் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். மேலும் இதுதான் ரஜினிகாந்தின் முதலும் கடைசியமான விளம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது பல வருடங்கள் கழித்து இவர் நடித்துள்ள விளம்பரத்தின் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.