அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் இதுதான்.!அதுவும் இந்த இயக்குனர் திரைப்படத்தில்.

0

வெள்ளித்திரையில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்த குஷ்பு, மீனா,கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சூரி,சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்குநாள் தூண்டிக் கொண்டே இருக்கிறது.

இந்தப் படத்தைப் பற்றிய ஏதாவது ஒரு அப்டேட் வெளிவருமா என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் ரஜினி தனது அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனருடன் கைகோர்க்க உள்ளார் என ஒரு தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது.

அந்த தகவலில் ரஜினி தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தான் அடுத்த திரைப்படத்தில் நடிக்கப் போவதாகவும் சமீபத்தில் பெரியசாமியிடம் ரஜினி தொலைபேசியில் பேசியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் இதனைத் தொடர்ந்து ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கினால் படம் நன்றாக ஓடுவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அதிக வசூல் அளிக்கும் என்பதை தெரிந்து கொண்டுள்ளார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

rajini2
rajini2

அதுமட்டுமல்லாமல் ரஜினியின் அடுத்த திரைப்படம் எப்பொழுது படபிடிப்பு தொடங்கும் எனவும் ரஜினி எப்பொழுது இதை உறுதி செய்வார் என ரசிகர்கள் பலரும் கேட்டு கொண்டிருக்கிறார்கள் ஆனால் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.