அண்மையில் என் மனதை கவர்ந்த இயக்குனர் இவர்தான் – இளம் இயக்குனரை கைகாட்டி புகழ்ந்து பேசிய பார்த்திபன்.!

நடிகர் பார்த்திபன் ஒத்த செருப்பு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கிய நடித்துள்ளார் இந்த படம் வெகு விரைவிலேயே திரையரங்கில் வெளியாக ரெடியாக இருக்கிறது ஒத்த செருப்பு படம் போலவே இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் தெரிய வருகிறது.

இரவின் நிழல் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தற்போது படம் சிறப்பாக வந்துள்ளன என தெரிய வருகிறது. படம் வெளி வருவதற்கு முன்பாக படத்தை பற்றி சில தகவல்களை பார்த்திபன் கொடுத்து வருகிறார் அதேசமயம் சிலவிதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார்.

அந்த வகையில் அண்மையில் உங்கள் மனம் கவர்ந்த இயக்குனர் யார் என கேட்டுள்ளனர் அதற்கு நடிகர் பார்த்திபன் சொன்னது. அண்மையில் என்னை கவர்ந்த இயக்குனர் என்றால் அது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் அவர் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

lokesh
lokesh

எப்படி இப்படி தொடர்ந்து சூப்பர் ஹிட் அவரால் கொடுக்க முடிகிறது எனக்கு ஆச்சரியமாக இருப்பதாக கூறினார். அதிலும் பெரிய பெரிய நடிகர்களை வைத்து தொடர்ந்து ஹிட் படம் கொடுப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல..

அதிலும் குறிப்பாக கடைசியில் விக்ரம் படத்தில் கமல் பகத்பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.  நானாக இருந்திருந்தால் எந்த இடத்திலிருந்து கதையை தூங்குவது என்றே தெரியாமல் இருந்திருப்பேன் ஆனால் லோகேஷ் மிக அருமையாக எடுத்து இருந்தார் என கூறி முடித்தார் பார்த்திபன்.

Leave a Comment