தோனி ஓய்வை அறிவிக்கும் தேதி இதுதான்.. கடைசி ஐபிஎல் போட்டி யாருடன் தெரியுமா.? சிஎஸ்கே நரிவாகி சொன்ன தகவல்

0
dhoni
dhoni

இந்தியாவில் வருடம் தோறும் ஐபிஎல் சீசன் நடத்தப்பட்டு வருகிறது இதுவரை 15 சீசன்கள் முடிந்த நிலையில் 16 வது சீசன் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி துவங்கி மே 28 முடிய உள்ளது இதில் மொத்தம் 10 அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரும் ஒவ்வொரு போட்டியுமே மிக முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த சீசன் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய சீசன் ஆக இருக்கப்போகிறது ஏனென்றால் சிஎஸ்கே அணியின் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான மகேந்திர சிங் தோனி சென்னை அணியில் இருந்தவரை பல தடவை பைனலுக்கு முன்னேறியதோடு மட்டுமல்லாமல் பல தடவை கோப்பையை வென்று இருக்கிறது.

இதனால் இந்த தடவை சிஎஸ்கே அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சீசனோடு தோனி தனது ஓய்வை அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  சில வருடங்களுக்கு முன்பே தோனி தன்னுடைய கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் இருக்கும் என சொல்லினார்.

ஆனால் இந்த போட்டி எப்போ என்பது தெரியாமல் இருந்து வந்தது இப்படி இருக்கின்ற நிலையில் சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் தோனி ஓய்வு குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. மகேந்திர சிங் தோனி மே 14ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்த உடனேயே ஓய்வினை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்த போட்டியை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது இருப்பினும் இது குறித்து என்னால் அதிகாரப்பூர்வமாக கூற விட முடியாது தோனி தான் இறுதி முடிவை எடுப்பார் என தனக்கு தெரிந்த சில தகவல்களை வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். இந்த தகவல் இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.