வசூல் என்னமோ இதுதான், ஆனால் எனக்கு கிடைத்தது இது மட்டும் தான்.! வாரிசு பட்த்தின் வசூலால் புலம்பித் தள்ளும் தில்ராஜ்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்  நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக்கி வருவதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து இந்த படத்தின் அப்டேடுகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

அதாவது லியோ திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் எல்சியு-வில்  இணைய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் அவர்கள் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற வாரிசு திரைப்படம் தற்போது 300 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கு கிடைத்தது இதுதான் என்று கூறி புலம்பி வருகிறாராம்.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் இந்த திரைப்படம் தற்போது 300 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் வசூல் பெற்று தரும் என்று நினைத்திருந்த தில்ராஜிக்கு புலம்பல் தான் மிஞ்சியது.

அதாவது தில்ராஜின் சொந்த ஊரான ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வாரிசு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அங்கு 50 கோடி மட்டும் தான் ஷேர் கிடைத்தது அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டு உரிமையை லலித்குமார் அவர்கள் 60 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறார் ஆனால் தமிழகத்தில் 7 கோடி மட்டும் தான் ஷேர் கிடைத்திருப்பதாக கூறி புலம்பி வருகிறார் தில்ராஜ் இந்த தகவல் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version