விக்ரம் படத்தில் கமலின் கதாபாத்திரம் இதுவா.. அப்படினா 30 வருஷத்துக்கு அப்புறம் புதிய ரிஸ்க் எடுக்கிறார்.! வைரல் நியூஸ் இதோ.

0

லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் ஆகிய ஹிட் படங்களை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனை வைத்து “விக்ரம்” என்ற திரைப்படத்தை எடுக்கவுள்ளார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் நடிப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவெலில் எதிரி உள்ளது.

சமீப வருடங்களாக நடிகர் கமல் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இறங்கி உள்ளதால் அவரது ரசிகர்களும் கொண்டாட ரெடியாக இருக்கின்றனர். இந்த படத்தில் அவருடன் இணைந்து பகத்  பாசில், விஜய் சேதுபதி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்தப்படத்தில் இவர்களுக்கு பக்கபலமாக அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படி இருக்க விக்ரம் படத்தில் இருந்து ஒரு சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தின் முழு கதையையும் கமலுக்கு சொல்லி ஓகே செய்தார் கதையைக் கேட்டுவிட்டு தான் இந்தப் படத்தில் கமிட் ஆகியுள்ளார் அதாவது இந்த படத்தில் கமல் முற்றிலும் கண் தெரியாத நபராக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இவர் 1981 ஆம் ஆண்டு  வெளியான ராஜபார்வை என்ற திரைப் படத்தில் பார்வையற்றவராக நடித்திருந்தார். 30 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் கமல் விக்ரம் திரைப்படத்தில் இப்படி ஒரு சவாலான கேரக்டர்களில் ஏற்று நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க ரெடியாக இருக்கிறது என சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.