சந்திரலேகா சீரியல் நடிகை திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளை இவர்தான்.! வைரலாகும் புகைபடம்..

swetha
swetha

சமீப காலங்களாக சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துவரும் நிலையில் அனைத்து பிரபலங்களும் சோசியல் மீடியாவில் தங்களுடைய வாழ்வில் நடக்கும் ஏராளமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது சந்திரலேகா சீரியல் நடிகை தன்னுடைய வருங்கால கணவர் குறித்து பதிவிட்டுள்ளார். அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் சன் டிவியில் நீண்ட காலங்களாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் சந்திரலேகா. இந்த சீரியல் தான் சமீபத்தில் தான் நிறைவடைந்தது இந்த சீரியலின் மூலம் பட்டி தொட்டி அவங்கும் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ஸ்வேதா. விளம்பர படங்களில் நடிக்க தொடங்கிய இவர் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார் மேலும் 2008ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான வள்ளுவன் வாசுகி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை இருந்தாலும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அந்த வகையில் இதுவரையிலும் இவர் ஒன்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடைசியாக இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூலோகம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணமாக தான் சன் டிவி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மகள் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு சந்திரலேகா, நிலா உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஸ்வேதா போட்டுள்ள போஸ்ட் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அதாவது ஸ்வேதா தான் திருமணம் செய்து கொள்ளும் வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் எனது வாழ்க்கை துணையை கண்டுபிடித்தேன் என்று கூறியுள்ளார் எனவே இதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.