வாத்தி திரைப்படத்தில் இருக்கும் “மிகப்பெரிய மைனஸ்” இதுதான்.. ஒன்னு இல்ல ரெண்டு இல்ல..

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான “வாத்தி” திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது குறிப்பாக தமிழ், தெலுங்கில் இந்த படம் பெரிய அளவில் ரிலீஸ் ஆனது. படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து சம்யுத்தா மேனன் ஹீரோயின்னாக நடித்தார், வில்லனாக சமுத்திரகனி நடித்திருந்தார்.

இவர்களுடன் இணைந்து tanikella bharani, சாய்குமார், இளவரசு, ஆடுகளம் நரேன் என பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் படம் முழுக்க முழுக்க கல்வி மற்றும் வாத்தியாரை மையமாக வைத்து படம் உருவாகி இருந்ததால் ரசிகர்களின் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பு அமோகமாக இருந்தது அதுமட்டுமில்லாமல் வசூலும் தாறுமாறாக இருக்கிறது.

முதல் நாளே பத்து கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் மூன்று நாள் முடிவில் மட்டுமே சுமார் 20 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறது. இப்படி திரையுலகில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “வாத்தி” படத்திலும் சில குறைகளும் இருக்கின்றன அதைப் பற்றி தான் நாம் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்.

1. வில்லன் : தமிழ், தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் சமுத்திரக்கனி எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பார் குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் டயலாக் ஒன்னும்  ஒன்னும் சும்மா பயங்கரமா இருக்கும்.. ஆனால் இந்த படத்தில் பில்டப் இருக்கே தவிர எப்படி ஆக்சன் என எதுவுமே இல்லை.. கிட்டத்தட்ட ஒரு டம்மி போல தான் இருந்தார்.

2.  டீடைல் மிஸ்ஸிங்  : படத்தில் ஒரு விஷயத்தை காட்டுகிறோம் என்றால் அதற்கு பின்னாடி நிறைய டீடெயில்களை சொல்லுவார்கள் ஆனால் இந்த படத்தில் அதில் நிறைய குறைகள் இருக்கிறது எடுத்துக்காட்டு வேலூர் மாணவர்கள் ஓடிவரும் வாகனங்கள் கோவை பதிவின் கொண்டுள்ளது. தனுஷ் வீட்டிற்கு அருகில் ஒட்டப்பட்டு இருக்கும் அருணாச்சலம் படம் போஸ்டர் ஆறு மாதம் ஆன பிறகும் கிளிக்காமல் அப்படியே இருக்கும் என பல டீடைல் இந்த படத்தில் மிஸ் ஆகி இருந்தது.

3. வாத்தியார் : தமிழில் சாட்டை, ராட்சசி போன்ற படங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் போலவே இந்த படத்திலும் வாத்தியார் பாடம் எடுப்பது, அறிவுரை போன்ற இவற்றையே காட்டி உள்ளனர். 4. செண்டிமெண்ட் சீன்கள்  : படத்தில் நிறைய இடத்தில் செண்டிமெண்ட் சீன்கள் இருக்கும் இதுவே பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது மேலும் உறுதி சீனில் ஓர் திருந்துவது, யார் சொன்னதும் அனைவரும் 80 மதிப்பெண் எடுப்பது என இருக்கும்..

Leave a Comment