இதுவரைக்கும் நான் அமைத்த bgm-ல் இதுதான் மிகச் சிறந்த bgm.! ஜவான் திரைப்படம் குறித்து பேசிய அனிருத்…

anirudh
anirudh

தமிழைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார் இயக்குனர் அட்லி இவர் தமிழில் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று ஹார்ட்ரிக் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஷாருக்கானின் பட வாய்ப்பு அவரை தேடி வந்தது இது தக்க வைத்துக் கொள்ள அட்லி அந்த படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் பாலிவுட்டில் தன்னுடைய கால் தடத்தை பதிக்கிறார்.

இந்த படத்தில் ஷாருக்கான் அவர்கள் இரண்டு வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது மேலும் இந்த திரைப்படத்திற்கு வில்லனாக விஜய் சேதுபதி அவர்கள் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் ஜவான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் ஷாருகானின் படமான பதான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் கலெக்ஷன் பெற்று இருக்கிறது இதனை தொடர்ந்து பதான் திரைப்படத்தின் வசூலை ஜவான் திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜவான் திரைப்படம் குறித்து பேசிய அனிருத் அவர்கள் இதுவரைக்கும் நான் அமைக்காத இசையில் இந்த படத்திற்காக நான் இசையமைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அது மட்டுமல்லாமல் எனக்கு சிறுவயதில் இருந்து ஷாருக்கானை மிகவும் பிடிக்கும் அந்த வகையில் ஷாருக்கான் படத்தில் இசையமைப்பது நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இந்த வாய்ப்பை நான் எப்படியாவது தக்க வைத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்காக இதுவரைக்கும் எந்த ஒரு படத்திற்கும் இந்த மாதிரி நான் இசையமைத்தது கிடையாது என்று கூறியிருக்கிறார் அந்த அளவிற்கு ஜவான் திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த இசையை வெளிகாட்டி இருக்கிறார் அனிருத் இதை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.