மங்காத்தா 2 திரைப்படம் குறித்து வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு சொன்ன பதில் இதுதான்.!

0

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 60% முடிவடைந்த நிலையில் மீதி படப்பிடிப்பு அரசு அனுமதி உடன் தொடங்கப்படும் என தெரியவருகிறது.

இத்திரைப்படத்தை நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய இயக்குனரான ஹச். வினோத் அவர்கள் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இதனால் இந்தக் கூட்டணியின் படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர் .

அந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அஜீத்தின் மங்காத்தா 2  ஷூட்டிங் நடைபெற உள்ளதாக பரபரப்பு செய்தி ஒன்றை கிளப்பியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் உடனடியாக வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா 2 ஷூட்டிங் நடைபெற உள்ளதா என கேள்வி கேட்டதற்கு அவர் ரியாக்சன் மட்டுமே பதிலாக அனுப்பினார்.

அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பலரும் வெங்கட் பிரபுவிடம் படம் எப்போது எடுக்கப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர். ஒரு சிலர் அப்படி நடக்க இருந்தால் முன்கூட்டியே தெரிவியுங்கள் என்று கூறிவருகின்றனர்.