சினிமாவில் மட்டும் நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை என்றால் நயன்தாராவின் நிலைமை இதுதான்.! அப்போ சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னி அதோ கதிதானா..

0

This is the aim of Nayantara if she doesn’t get a chance to act in cinema information viral: தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், ரஜினி என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு நிகராக ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார்.

இவர் சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இத்திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இவ்வாறு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகை நயன்தாரா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இல்லையாம் CA சார்ட்டட் அக்கௌன்ட்டராக தான் பணியாற்ற தான் இவர் விரும்பினாராம்.

இவ்வாறு வெளியான தகவல் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் எந்த வேலை செஞ்சாலும் நம்ம நயன்தாரா நயன்தாரா தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.